Home நடந்த நிகழ்ச்சிகள் கறுப்பு 505 : ஈப்போவிலும் 30,000 பேர் எதிர்ப்புப் பேரணிக்குத் திரண்டனர்!

கறுப்பு 505 : ஈப்போவிலும் 30,000 பேர் எதிர்ப்புப் பேரணிக்குத் திரண்டனர்!

726
0
SHARE
Ad

ANWARமே 12 – கிளானா ஜெயா, பினாங்கு போன்ற இடங்களில் மாபெரும் பேரணிகளை அன்வார் இப்ராகிம் தலைமையில் நடத்தி முடித்த மக்கள் கூட்டணி இன்று ஈப்போவிலும் அதே போன்றதொரு பேரணியை வெற்றிகரமாக நடத்தியது.

ஏறத்தாழ 30,000 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணிக்கு அனுமதி இல்லை என காவல் துறை எச்சரிக்கை விடுத்தும் ஆயிரக்கணக்காணோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பேராக் மாநில பிகேஆர் கட்சி அலுவலம் அருகில் பேராக் மாநில அரசாங்க செயலகம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டம் இரவு 8 மணியளவில் தொடங்கியது.

மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் பேராக் மந்திரி  பெசார் முகமட் நிசார் ஜமாலுடின் ஆகியோர் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

காவல் துறையினர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்றிருந்தாலும் அவர்கள் எந்தவொரு தடங்கலையும் ஏற்படுத்தவில்லை.

தேர்தல் முறைகேடுகள் குறித்து மக்கள் கூட்டணி அன்வார் இப்ராகிம் தலைமையில் நடத்தி வரும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு “கறுப்பு 505” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இன்று ஈப்போ கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து குவாந்தான், ஜோகூர் பாரு போன்ற நகரங்களிலும் இத்தகைய கறுப்பு 505 பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.