பினாங்கு – மலேசியப் பெண்களும் ஊடறு இணைய இதழும் இணைந்து நடத்தும் ‘பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ என்ற நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 27 தொடங்கி, நாளை 28-ஆம் தேதி, வரையில், பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணி தொடங்கி மாலை வரை நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பல நாடுகளிலிருந்து பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பெண் செயற்பாட்டாளர்களோடு இணைந்து மலேசிய பெண்களும் தங்களின் கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர்.
மலேசிய பெண்கள் பேச போகும் தலையங்கங்கள்:
1. மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும் ( எழுத்தாளர் யோகி)
2. மலேசிய இலக்கியத்தில் பெண்கள் ( எழுத்தாளர் மீரா வாணி)
3. மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள்
( செயற்பாட்டாளர், பி.எஸ்.எம் சிவரஞ்சனி)
4. மலேசிய அரசியலில் பெண்கள் (YB கஸ்தூரி பட்டு)
5. தமிழ் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு –(. Yb காமாட்சி)
6. மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பு – (ப. பிரேமா டீச்சர்)
7. நான் யார் (கவிதை வாசிப்பு) – (பத்திரிகையாளர் ரமேஸ்வரி)
உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்து கலந்துரையாடல் நடைப்பெறும்.
இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பெண்ணிய கவிஞர்களான மாலதி மைத்திரி, ச.நா.விஜயலட்சுமி, புதியமாதவி மற்றும் வழக்கறிஞர் ரஜனி ஆகியோருடன் இலங்கையைச் சேர்ந்த முக்கிய பெண்ணிய செயற்பார்ட்டாளர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த பெண்ணிலைச் சார்ந்த கலந்துரையாடல் கிட்டதட்ட 21 சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. ஐரோப்பா, கனடா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இச்சந்திப்பினை ஊடறு வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது 22-வது பெண்ணிலை சந்திப்பை மலேசியாவில் நடத்த ஊடறு இணைய தளம் முடிவெடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மலேசியப் பெண்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களான மணிமொழி (மலேசியா), யோகி (மலேசியா) , புதியமாதவி (இந்தியா) , ஆழியாள் , றஞ்சி (சுவீஸ்), யாழினி (இலங்கை, சந்திரலேகா (இலங்கை) ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள். இலவசமாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
குறிப்பு: முதல் நாள் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டும் கலந்துக் கொள்ளலாம். ஆண்கள் கலந்துக்கொள்ள முடியாது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக்கொள்ளலாம். உணவு மற்றும் தேனீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இலவச நிகழ்ச்சியாகும்.
நிகழ்ச்சி நடைபெறும் முகவரி :
Jeti jabatan laut pulau Pinang,
Jalan Tun Dr Lim Chong Eu,
11900 pulau Pinang. Malaysia.