Home Featured தமிழ் நாடு பாரிவேந்தருக்கு நீதிமன்றக் காவல்!

பாரிவேந்தருக்கு நீதிமன்றக் காவல்!

1109
0
SHARE
Ad

Paari vendhar-pacha muthu-srm

சென்னை – பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவைத் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நேற்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரிவேந்தரை, பிணையில் (ஜாமீன்) விடுவிக்க வேண்டும் என செய்து கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பம் எதிர்வரும் திங்கட்கிழமை மே 29-ஆம் தேதி நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக எழும்பூர் சிபிசிஜடி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பாரிவேந்தர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து, சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றதும்  இந்திய நேரப்படி நேற்றிரவு 10.00 மணிக்கு மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வரப்பட்டார்.