சென்னை – தமிழ்நாடு காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்த எஸ்ஆர்எம் கல்லூரி குழுமங்களின் தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தர் (படம்) இன்று பிணையில் (ஜாமீனில்) விடுதலை செய்யப்பட்டார்.
ஐஜேகே கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மதன் காணாமல் போன விவகாரம், மற்றும் மருத்துவ கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க பணம் வசூலித்தது போன்ற விவகாரங்களில் விசாரணைக்காக பாரிவேந்தர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாரிவேந்தருக்கான நிபந்தனைகளின்படி அவர் 75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் 10 இலட்சம் ரூபாய் பிணையில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தினசரி காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் வருகை தந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பாரிவேந்தரின் அனைத்துலகக் கடப்பிதழும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.