Home Featured தமிழ் நாடு பாரிவேந்தர் ஜாமீனில் விடுதலை! கட்சியினர் கோலாகல வரவேற்பு!

பாரிவேந்தர் ஜாமீனில் விடுதலை! கட்சியினர் கோலாகல வரவேற்பு!

760
0
SHARE
Ad

pari-venthar-srm

சென்னை – நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி 75 கோடி ரூபாய் செலுத்திய பின்னர், இன்று வெள்ளிக்கிழமை எஸ்ஆர்எம் குழுமங்களின் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் நிறுவிய கட்சியான ஐஜேகே கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் அவருக்கு கோலாகல வரவேற்பு நல்கினர்.

#TamilSchoolmychoice

10 இலட்சம் ரூபாய் பிணையில் பாரிவேந்தர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புகார்தாரர்களிடம் இருந்து அவர் நேரடியாக பணம் எதையும் பெறவில்லை மற்றும் எஸ்ஆர்எம் கல்லூரி யாரையும் பணம் வசூலிக்க தனது பிரதிநிதியாக நியமிக்கவில்லை போன்ற காரணங்களின் அடிப்படையில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.