கோலாலம்பூர், மார்ச்.19- ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது.
அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர்.
மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து கொண்டு வருவர்.
இதே போல ஆங்காரமான சக்திக்கு சிங்கம், முருகப்பெருமானுக்கு மயில் மற்றும் ஆட்டு கடா போன்ற வாகனங்கள் உள்ளன. நவக்கிரகத்தில் உள்ள சனிக்கு காக வாகனம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் உள்ள குருவிற்கு யானை வாகனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வாகனங்களை சிலர் அதிர்ஷ்ட சின்னமாக வைத்திருப்பர் சிலர் வழிபாட்டிற்கு உகந்ததாக வைத்திருப்பர்.
நமக்கு வாகன யோகம் அமைய வேண்டுமானால் ஆலயங்களில் உள்ள தெய்வ வாகனங்களையும் நாம் திருப்தியாக வழிபட வேண்டும்.