Home அரசியல் மக்கள் கூட்டணி தேர்தல் அறிக்கையை மாற்றியமைத்தது

மக்கள் கூட்டணி தேர்தல் அறிக்கையை மாற்றியமைத்தது

531
0
SHARE
Ad

Kula-DAP-Sliderஷா ஆலாம், மார்ச்.19- மக்கள் கூட்டணி கட்சி  “மக்களின் எதிர்பார்ப்பு கூட்டணி” என்ற கருப்பொருளில் தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டு மக்களிடம் கருத்துகளைப் பெற்று சில மாற்றங்கள் செய்தது.

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் போன்ற பிரச்சனைகளை சரிச்செய்யப்படும் என மக்களின் ஜனநாயக கட்சி (டி.ஏ.பி) உதவி தலைவர் எம்.குலசேகரன் (படம்) தெரிவித்தார்.

“இவ்விவகாரம் தொடர்பாக மலேசியா முழுவதும் உள்ள பல்வேறு மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  இது மிகவும் நெருக்குதலான சமயம். இந்நிலையில் 300,000 பேர் உள்ளனர்” என்று மேலும் சொன்னார்.

#TamilSchoolmychoice

saifudin2010 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி வெளியிட்ட “புக்கு ஜிங்கா” என்ற நூலில் உள்ள பொருளடக்கமே பாதி தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இந்த புதிய தேர்தல் கொள்கைகளை மக்கள் சுலபமாக அறிந்துகொள்ள பி.கே.ஆர் கட்சி அடுத்த வாரம்   நடைமுறை படுத்துவதாக அறிவித்தது.

“நாங்கள் தேர்தல் அணுகுமுறைகள் மூலம் பிரச்சாரத்திற்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம்” என்று பி.கே.ஆர் பொதுச் செயளாலர் டத்தோ சைபுடின் நசுஷன் (படம்) தெரிவித்தார்.

mustafaஅதேசமயம் பாரம்பரிய அணுகுமுறைகளான கருத்தரங்கம் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

“தேர்தல் அறிக்கையானது, காலமும் காலத்தின் கட்டுப்பாடுகளும் கொண்டு அமையப்பெற்றிருக்கும். சில விஷயங்கள் சீக்கிரமாக செய்து விடலாம். சில விஷங்கள் தாமதமாகும். மேலும் சில விஷயங்களுக்கு ஐந்து வருட கால தவணைகளுக்கு மேலாகும்.” என்று பாஸ் கட்சி பொதுச் செயளாலர் டத்தொ முஸ்தப்பா அலி (படம்) தெரிவித்தார்.

இந்த தேர்தல் அறிக்கையின் வழி மக்கள் கூட்டணியும் மற்றும் பொதுமக்களும் பல நன்மைகள் பெறுவர் என்று மேலும் கூறினார்.