ஷா ஆலாம், மார்ச்.19- பாஸ் கட்சி தலைமை இயக்க அதிகாரி டத்தோ துவான் இப்ராகிம் துவான் மன் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் சட்டமன்றத்தில் 10 தொகுதிளாக அதிகரிக்கரித்து போட்டியிடும் எனவும் இதில் சபா சட்டமன்றமும் சரவாக்கின் சட்டமன்றமும் உட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இக்கட்சியானது மலாய்காரர்கள் அதிகமாக உள்ள இடங்களில் போட்டியிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாஸ் கட்சி அங்கு போட்டியிடுவது சபா மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெறும். “கலிலா” என்ற பாஸ் கட்சியின் சுலோகத்தை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றார்.
“நாங்கள் அங்கு போட்டியிடுவதால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இல்லை” என்று நேற்று சினார் நாளிதழின் பேட்டியின் வழி தெரிவித்தார்.
எதிர்வரும் பொது தேர்தலில், பாஸ் கட்சியானது சபா மாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளரை போட்டியிட நிறுத்தும்.
கடந்த 2008 ஆண்டு பாஸ் கட்சி 66 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிர்வரும் 13 ஆம் பொது தேர்தலில் கடந்த தேர்தலைக் காட்டிலும் பத்து தொகுதிகள் கூடுதலாக 76 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் போட்டியிடும் என்று பாஸ் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹடி அவாங் குறிப்பிட்டதாக சினார் நாளிதழ் தெரிவித்தது.