தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
எதிர்வரும் 24.3.2012 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.30க்கு தாப்பா ரிஸ்டா மண்டபத்தில் “பெரியார் ஊட்டிய அறிவுப்படை இங்கே உதயமாகிறது” என்ற கருப்பொருளில் பாசறை இளைஞரணித் தலைவர் எழில் மன்னன் வாசு தலைமையில் சிறப்பாக நடக்கவுள்ளது.
இந்நிகழ்வுக்கு 15 வயது முதல் 25 வயது உள்ள ஆண் பெண் வேறுபாடுன்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.
வெகு தூரத்திலிருந்து வர விரும்புவோர் முன் கூட்டியே ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டால், தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு, கெ.வாசு பெரியார் பாசறை நிறுவனத் தலைவர் 016-5676422 என்ற எண் வழி தொடர்பு கொள்ளலாம்.