Home நாடு லகாட் டத்துவில் நேற்று காவல்துறையினருக்கும், சுலு படையினருக்குமிடையே 4 முறை மோதல்

லகாட் டத்துவில் நேற்று காவல்துறையினருக்கும், சுலு படையினருக்குமிடையே 4 முறை மோதல்

560
0
SHARE
Ad

2லகாட் டத்து, மார்ச் 19 –  லகாட் டத்துவில் நேற்று  மலேசியப் படையினருக்கும், ஊடுருவல்காரர்களுக்குமிடையே நான்கு முறை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக சபா காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், நேற்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெற்ற இந்த சண்டையில் மலேசியப் படையினர் எவருக்கும் காயம் எதுவும் நேரவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

மேலும், தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில், சண்டகான் பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு சேர்த்து இதுவரை பாதுகாப்பு குற்றத்தின் கீழ் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.