Home நிகழ்வுகள் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் பரிசளிப்பு விழா

யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் பரிசளிப்பு விழா

728
0
SHARE
Ad

omsசிலாங்கூர், மார்ச்.19- சிலாங்கூர் மாநிலத் தமிழ் பள்ளிகளில் யூபிஎஸ்ஆர் தேர்வில் 7ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும் அனைத்து பாடங்களில் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு  வெள்ளி பதகங்களும் ஓம்ஸ் அறவாரியம் பரிசாக வழங்கவுள்ளது.

இந்நிகழ்வு 24.3.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு ஸ்டேடியம் மெலாவத்தி, ஷா ஆலாம் என்ற முகவரில் நடைபெறவுள்ளது.

தங்க பதக்கங்களையும் வெள்ளி பதக்கங்களையும் பரிசாக பெற தகுதி உள்ள 2012 ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், தவறாமல் தங்களது பெற்றோர்களுடன் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

#TamilSchoolmychoice

 

குறிப்பு

-மாணவர்கள் இப்பரிசளிப்பு விழாவுக்கு பள்ளிச் சீருடையுடன் வர வேண்டும்.

– யூபிஎஸ்ஆர் தேர்ச்சி சான்றிதழை (PHOTOSTAT COPY) உடன் கொண்டு வர வேண்டும்.

-பெற்றோர்கள் உடன் அழைத்து வர வேண்டும்.

-காலை 8.00 மாணி முதல் 8.30 மணிக்குள் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.