புதுடில்லி – காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 8.30 மணி) பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் நாளை வியாழக்கிழமை ஐக்கிய நாட்டு சபை பொதுப் பேரவையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உரையாற்றவிருக்கின்றார். அவரது உரையில் காஷ்மீர் விவகாரம் முக்கிய இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இன்று மாலை நரேந்திர மோடி உயர்மட்ட அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றார்.