Home Featured நாடு 4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!

4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!

768
0
SHARE
Ad

subra-dr-objecting-ec-delineation

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதிகளுக்கான மறு சீரமைப்பினால், வழக்கமாக மஇகா போட்டியிடும் நான்கு தொகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் இது குறித்து மஇகா ஆட்சேபங்களை சமர்ப்பிக்கும் எனவும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொகுதி சீரமைப்பு தொடர்பில் மஇகா தலைமையகத்தில் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் டாக்டர் சுப்ரமணியம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட 4 தொகுதிகளில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளாகும். மற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகும்.

பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் தெலுக் கெமாங், தாப்பா ஆகிய தொகுதிகளாகும். இந்தத் தொகுதிகளிலும், கெடாவிலுள்ள லூனாஸ், மற்றும் சிலாங்கூரிலுள்ள சுங்கை துவா (முன்பு பத்துகேவ்ஸ் என அழைக்கப்பட்டது) என்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த சுப்ரா, மேற்கண்ட 4 தொகுதிகள் குறித்த தங்கள் கட்சியின் ஆட்சேபங்களை சம்பந்தப்பட்ட தொகுதி, மாநிலத் தலைவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒரு தொகுதியில் ஆட்சேபங்களைத் தெரிவிக்க குறைந்த பட்சம் 100 வாக்காளர்கள் முன்வரவேண்டும் என்றும் எதிர்வரும் அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட சுப்ரா, இதற்கான ஏற்பாடுகளை மஇகா செய்து வருகின்றது என்றும் அறிவித்துள்ளார்.

இந்த முறை தொகுதி எல்லை, வாக்காளர் மறு சீரமைப்பு விவகாரங்களில் கெராக்கான், மசீச போன்ற தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளே எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருக்கும் வேளையில், தற்போது மஇகாவும் தனது ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளது.

(படவிளக்கம்: நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரமணியம் மற்ற மஇகா தலைவர்களுடன்….)