Home Featured உலகம் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பியர்ஸ் இறுதிச் சடங்கில் பில் கிளிண்டன் கலந்து கொள்கின்றார்!

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பியர்ஸ் இறுதிச் சடங்கில் பில் கிளிண்டன் கலந்து கொள்கின்றார்!

620
0
SHARE
Ad

shimon-peres-former-israel-pm-decd

டெல் அவிவ் – நேற்று செவ்வாய்க்கிழமை காலமான இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷிமன் பியர்ஸ் (படம்) இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொள்ளவிருக்கின்றார்.

93 வயதான பியர்ஸ் 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டை நிர்மாணிக்கப் போராடியவராவார். அதன் பின்னர் இஸ்ரேல் நாட்டின் பல பதவிகளை அலங்கரித்தவர். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு இஸ்ரேல் அரசாங்கத்தில் பல பதவிகளைத் தொடர்ந்து வகித்து வந்தவர் பியர்ஸ்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் நடப்பு அமெரிக்க அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் இருவரும் கலந்து கொள்வர் என இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

எனினும், ஹிலாரியின் பிரச்சாரக் குழுவினர் பில் கிளிண்டன் மட்டுமே பியர்சின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார் என்றும் ஹிலாரி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி, இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட யூதர்கள் வசம் பெருமளவில் இருக்கின்றது என்பது எப்போதும் கூறப்படும் கூற்றாகும். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பணபலம் வாய்ந்தவர்கள் என்பதோடு, அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மையங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.