Home Featured வணிகம் புதிய புரோட்டோன் சாகா கார் அறிமுகம்!

புதிய புரோட்டோன் சாகா கார் அறிமுகம்!

839
0
SHARE
Ad

proton-saga-1-3-launched-28-sep-2016

ஷா ஆலாம் – மலேசியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், புரோட்டோன் சாகா ரக கார்களின் மூன்றாவது தலைமுறை தயாரிப்பான புதிய வடிவிலான 1.3எல் (1.3L) கார்களை நேற்று அறிமுகப்படுத்தியது.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய காரை அறிமுகப்படுத்தினார். இளைஞர்களையும், முதன் முறையாக கார் வாங்குபவர்களையும், இரண்டாவது காராகப் பயன்படுத்த நினைப்பவர்களையும் கருத்தில் கொண்டு புதிய ரகக் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

முதன் முதலாக புரோட்டோன் சாகா கார்1985-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாவது தலைமுறை கார்கள் 2008-இல் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது தலைமுறைக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் உலகம் முழுவதிலும் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட கார்களை புரோட்டோன் விற்பனை செய்துள்ளது.

proton-saga-new

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காரில் பல நுணுக்கமான மேம்பாடுகள், இணைக்கப்பட்டுள்ளன. அழகான வடிவமைப்பு, பாதுகாப்புத் தன்மை, வசதிகள், விலைக்கான சிறந்த பயன்கள் ஆகிய அம்சங்கள் இந்தக் காரின் சிறப்புகளாகும்.

ஸ்டாண்டர்ட், எக்சிகியூட்டிவ், பிரிமியம் என மூன்று பிரிவு ரகங்களில் வெளிவரும் புரோட்டோன் சாகா கார்கள், 36,800 ரிங்கிட் முதல் 45,800 ரிங்கிட் வரையிலான விலைகளை தீபகற்ப மலேசியாவில் கொண்டிருக்கும்.

குறைவான எண்ணெய் பயன்பாட்டைக் கொண்டிருக்கும் முறையில் இந்தப் புதிய கார் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புரோட்டோன் சாகா புதிய கார்கள் தற்போது எல்லா புரோட்டோன் விற்பனை மையங்களிலும் பார்வையிடுவதற்காக இடம் பெற்றிருக்கின்றன. விரும்பும் பயனீட்டாளர்களுக்கு இலவச பரிசோதனை ஓட்டங்களும் ஏற்பாடு செய்து தரப்படும் என புரோட்டோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்கள் பெற விரும்புவோர், கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில், அல்லது இணைய அஞ்சல் முகவரி, அல்லது இணைய, முகநூல் பக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்

1800 888 398
customercare@proton.com
www.newsaga.proton.com
https://www.facebook.com/ProtonCarsOfficial/