Home Featured கலையுலகம் சிவகார்த்திகேயன் மலேசியா வருகை – ஜிஎம் கிள்ளானில் சந்திக்கலாம்!

சிவகார்த்திகேயன் மலேசியா வருகை – ஜிஎம் கிள்ளானில் சந்திக்கலாம்!

777
0
SHARE
Ad

untitledகோலாலம்பூர் – இன்று மாலை 6 மணியளவில் ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City) சென்றால், அங்கு நடிகர் சிவகார்த்திகேயனைக் காணும் வாய்ப்பு உள்ளது.

தனது புதிய திரைப்படமான ‘ரெமோ’ விளம்பரத்தை முன்னிட்டு, மலேசியா வந்துள்ள சிவகார்த்திகேயன், அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 நிகழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

படம்: டிஎச்ஆர் பேஸ்புக்