Home Featured கலையுலகம் 2-வது நாளாக கோலாகலமாகத் தொடரும் அஸ்ட்ரோவின் இந்திய வர்த்தக விழா!

2-வது நாளாக கோலாகலமாகத் தொடரும் அஸ்ட்ரோவின் இந்திய வர்த்தக விழா!

719
0
SHARE
Ad

astro

கிள்ளான் – அஸ்ட்ரோவின் இந்திய வர்த்தக விழா-தீபாவளிக் கொண்டாட்டங்கள் இணைந்த நிகழ்ச்சி கிள்ளான் ஜிஎம் மால் வணிக வளாகத்தில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து கோலாகலமானக் கொண்டாட்டங்களுடன் நடைபெற்று வருகின்றது.

இன்று சனிக்கிழமை காலை முதல் தொடங்கிய வர்த்தக விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நேற்று இந்த வர்த்தக விழாவுக்கு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு வருகை தந்து இரசிகர்களிடையே உரையாற்றினார்.

sivakarthigeyan-remo

இந்த வாரம் வெளியாகவிருக்கும் தனது ‘ரொமோ’ படத்துக்கான விளம்பரத்துக்காக மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும்  சிவகார்த்திகேயன், அஸ்ட்ரோவின் வர்த்தக விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு 8.00 மணியளவில் கிள்ளான் ஜிஎம் மால் வணிக வளாகத்திற்கு  வருகை தந்திருந்தார்.

அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் டிஎச்ஆர் ராகா வானொலிக் கலைஞர்களின் படைப்பில் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.