Home Featured இந்தியா இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தானில் தடை!

இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தானில் தடை!

777
0
SHARE
Ad

indian-tv-channels

புதுடில்லி – இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்  இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், நெருக்கடிகளைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்களுக்கு  பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தானிய கலைஞர்களுக்கு தடைவிதிக்கும் முடிவை இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களை தடை செய்யும் முடிவை அறிவித்துள்ள பாகிஸ்தானிய அரசாங்கம், எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.