Home Featured நாடு சபாவில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்!

சபாவில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்!

783
0
SHARE
Ad

Sabah Semporna 440 x 215

கோத்தாகினபாலு – கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்களால், செம்பூர்ணா பகுதியில் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் ரஸ்லான் சாரிபின் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 7.00 மணியளவில், 39 வயதான ரஸ்லான் சபா லாகாட் டத்து வந்தடைந்ததை, சபா காவல் துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் ஹாருண் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், கடத்தப்பட்டவர் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை.

லாகாட் டத்துவைச் சேர்ந்த உள்ளூர் சூலுக் இனத்தவரான ரஸ்லான் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் கடத்தல்காரர்கள் அவரோடு படகில் இருந்த மற்றவர்களை கொள்ளையிட்டனர்.

அதன்பின்னர் லகாட் டத்து கடல் பகுதியில் இருந்த மற்றொரு மீன்பிடிப் படகையும் கடத்தல்காரர்கள் கொள்ளையிட்டனர்.