Home Featured தமிழ் நாடு முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

901
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மை நிலவரத்தை அரசு வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அளித்த மனு இன்று செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைப் பட்டியலில் இல்லை.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில், டிராபிக் ராமசாமி தன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளார்.

அதைக்கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு இன்று பட்டியலில் இல்லை. அதனால், வழக்கை இன்று விசாரிக்க முடியாது. ஆனாலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர், அந்த மாநில மக்களின் பிரதிநிதி. அதனால் அவரது உடல்நிலை குறித்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனினும், அதற்கு பதிலளிக்க தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.