Home Featured தமிழ் நாடு ஸ்டாலினும் அப்போல்லோ சென்றார்!

ஸ்டாலினும் அப்போல்லோ சென்றார்!

661
0
SHARE
Ad

stalin-mk-dmk

சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண வரிசையாக அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று சனிக்கிழமை மாலை திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க அப்போல்லோ மருத்துவமனை வந்தார்.

#TamilSchoolmychoice

முதல்வரை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை என்றாலும், அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து விவரம் அறிந்து கொண்டேன் என ஸ்டாலின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதா விரைவில் குணமடைந்து முதல்வருக்கான பணிகளைத் தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடன் திமுக தலைவர்கள் துரை முருகன், பொன்முடி ஆகியோரும் அப்போல்லோ வந்திருந்தனர்.

இன்று வைகோவும் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அறிந்து கொள்ள அப்போல்லோ மருத்துவமனை வந்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் ஜெயலலிதாவைக் காண இன்று அப்போல்லோ வந்திருந்தார்.