Home Featured நாடு தெங்கு அமிர் ஷா சிலாங்கூர் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்!

தெங்கு அமிர் ஷா சிலாங்கூர் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்!

809
0
SHARE
Ad

tengku-amir-shahகிள்ளான் – சனிக்கிழமை காலை இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற அரச விழாவில், ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமிர் ஷா, பட்டத்து இளவரசராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சூரி சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் ஆகியோர் முன்னிலையில், தெங்கு அமிர் ஷா சத்தியப் பிரமாணத்தை வாசித்தார்.

இவ்விழா நிறைவு பெற்றவுடன் அரச வழக்கப்படி, தெங்கு அமிர் ஷா, 7 நாட்களுக்கு சிலாங்கூரை விட்டு வெளியே இருக்க வேண்டும் என்பதால், அடுத்த சனிக்கிழமை தான் அவர் சிலாங்கூர் திரும்புவார் என்று சிலாங்கூர் அரச சபை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice