Home Featured தமிழ் நாடு பொறுப்பு முதல்வர் வேண்டும் – ஸ்டாலின் கருத்து!

பொறுப்பு முதல்வர் வேண்டும் – ஸ்டாலின் கருத்து!

682
0
SHARE
Ad

m-k-stalinசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அரசாங்க நிர்வாகத்தை சீராகக் கொண்டு செல்ல பொறுப்பு முதல்வர் வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில், காவிரி படுகையில் உள்ள நீர் இருப்பு குறித்து அறிய, மத்திய நீர்பாசனத்துறையில் இருந்து, உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.

ஆளுநர் வித்யாசாகர் மற்றும் தமிழக அமைச்சர்களைச் சந்தித்து அவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice