கோலாலம்பூர் – மஇகா-வை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியிலிருந்து பிரிந்து நிற்கும் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பின் முக்கிய தலைவர்களையும், கிளைத் தலைவர்களையும், மீண்டும் கட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையில், தான் இறங்கியிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் சுப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மஇகா-வைத் தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களாக டத்தோ பழனிவேல் தரப்பினரிடம் பேச்சு வார்த்தையை மேற்கொண்டு வந்துள்ளேன். அதன் அடிப்படையில், கட்சியின் நலன் கருதி அவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள மஇகா தயாராகவுள்ளது. இது குறித்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அதற்குரிய அமலாக்கச் செயல் திட்டங்கள் மஇகா-வின் வரக்கூடிய தேசியப் பேரவைக்குப் பின் மேற்கொள்ளப்படும். எனவே, கடந்த காலத்தை விட்டு, கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வார்கள் என பெரிதும் நம்புகிறேன்”
டாக்டர் சுப்ரா மேலும் தனது அறிக்கையில் “மஇகா-வைத் தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களாக கட்சியின் வெளியே இருக்கும் பல தலைவர்களிடம் பேச்சு வார்த்தையை மேற்கொண்டு வந்துள்ளேன். அதன் அடிப்படையில், கட்சியின் நலன் கருதி அவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள மஇகா தயாராகவுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் பிரதமர் அவர்கள் வெளியே இருக்கக் கூடியவர்கள் மீண்டும் மஇகா-வில் இணைந்து கட்சியை வலுப்டுத்த விருப்பப்படுகின்றார்கள் என்று அண்மையில் நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில் கூறியிருந்தார் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
“இது குறித்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அதற்குரிய அமலாக்கச் செயல் திட்டங்கள் மஇகா-வின் வரக்கூடிய தேசியப் பேரவைக்குப் பின் மேற்கொள்ளப்படும். எனவே, கடந்த காலத்தை விட்டு, கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வார்கள் என பெரிதும் நம்புகிறேன்” எனவும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஇகாவின் வருடாந்திர தேசியப் பொதுப் பேரவை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவிருக்கின்றது. பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்த பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கின்றார்.