Home உலகம் தமிழகத்துக்கு விமான சேவையை குறைத்தது இலங்கை

தமிழகத்துக்கு விமான சேவையை குறைத்தது இலங்கை

595
0
SHARE
Ad

Sri-Lankan-Airways---Sliderகொழும்பு, மார்ச்.20- தமிழகத்தில் புத்த மதத் துறவிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்துக்கு தங்களுடைய விமானப் போக்குவரத்து சேவையை பாதியாகக் குறைத்துள்ளது இலங்கை அரசு.

இலங்கை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

தமிழகத்துக்கு சுற்றுலா வந்திருந்த புத்த மதத் துறவிகள் சென்னையிலும் தஞ்சையிலும்  தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இந்தியத் தூதரகத்திடம் இலங்கைப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியுள்ளோம்.

#TamilSchoolmychoice

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பில் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையே வாரத்துக்கு இதுவரை 24 விமானங்கள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் நிலவும் சூழல் கருதியும் இலங்கை மக்களின் பாதுகாப்பு கருதியும் 24 விமானங்கள் என்பதை செவ்வாய்க்கிழமை முதல் 14 விமானங்களாகக் குறைத்திருக்கிறோம். வாரத்தின் ஏழு நாள்களில் காலை, மாலை மட்டுமே இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடரும்.

இந்தியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்:-

தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்தும் உரிய பாதுகாப்பு கோரியும் சிங்கள ராவயா துறவிகள் அமைப்பு சார்பாக நூற்றுக்கணக்கான துறவிகள் தலைநகர் கொழும்பில் பேரணியாகச் சென்று இந்தியத் தூதரகத்தில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படும் பதற்றமான சூழ்நிலையில் பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உரிய நடவடிக்கை:-

அண்மைக் காலமாக தமிழகத்தில் சிங்களர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் வருத்தத்துக்குரியது.

இலங்கையிலிருந்து தமிழகம் உள்பட இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்தியத் தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.