Home Featured தமிழ் நாடு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கைது!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கைது!

679
0
SHARE
Ad

nallaசென்னை – கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சியில் உள்ள மணல் குவாரியை மூடக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இயக்குநர் கவுதமன் உட்பட 400 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக நல்லகண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.