Home Featured நாடு பேராக்கில் கடந்த ஆண்டு 615 மாணவிகள் கர்ப்பம் – சுகாதாரத்துறை அறிக்கை!

பேராக்கில் கடந்த ஆண்டு 615 மாணவிகள் கர்ப்பம் – சுகாதாரத்துறை அறிக்கை!

750
0
SHARE
Ad

pregnancyபேராக் – கடந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் மட்டும் 615 மாணவிகள் கர்ப்பமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரப் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறுகையில், அரசாங்க மருத்துவங்களில் 787 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவற்றில், 411 பேர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்ததவர்கள், 120 பேர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்தவர்கள், 204 பேர் திருமணம் செய்யாமலேயே கர்ப்பமானதோடு பள்ளியையும் தொடர்ந்தனர். 52 பேர் பள்ளியையும் நிறுத்திவிட்டு, திருமணமும் செய்யாமல் இருப்பவர்கள் என்று சுகாதாரத்துறையின் அறிக்கை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.