Home Featured தொழில் நுட்பம் நஜிப் பெயரில் புதிய செயலி – இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்!

நஜிப் பெயரில் புதிய செயலி – இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்!

572
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கென்று தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் கலந்துரையாட, திட்டங்களையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்வவதற்காக ‘நஜிப் ரசாக்’ என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அமைத்திருப்பதாக நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி முதல் பயன்பாட்டில் வந்துள்ள அச்செயலியை பொதுமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

கூகுள் பிளே ஸ்டோர் ( Google Play Store), ஆப்பிள் ஆப்ஸ்டோர் (Apple Appstore) ஆகியவற்றில் கிடைக்கும் அச்செயலியின் மூலம், நஜிப் தனது நட்பு ஊடகங்களில் பகிரும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், அச்செயலி வழியாக நடத்தப்படும் பிரசாரங்கள், ஆய்வுகள் ஆகியவற்றிலும் பங்கேற்று, பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.