Home Featured நாடு உலகின் மிகக் கவர்ச்சியான கணக்கு ஆசிரியர் இப்போது மலேசியாவில்!

உலகின் மிகக் கவர்ச்சியான கணக்கு ஆசிரியர் இப்போது மலேசியாவில்!

699
0
SHARE
Ad

math1

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றின் மூலம் ஒரே நாள் இரவில் மிகப் பிரபலமடைந்து, உலகின் மிகக் கவர்ச்சியான கணக்கு ஆசிரியர் என்று பெயரெடுத்த ஒக்சானா நெவேசெலாயா, கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் மலேசியாவில் தான் இருக்கின்றார்.

பெலாருசைச் சேர்ந்த அப்பெண் கவர்ச்சியான உடையுடன் கணக்குப் பாடம் நடத்துவது போல் வெளியான காணொளி தான் அவரது இந்த திடீர் உலகப் புகழுக்குக் காரணம்.

#TamilSchoolmychoice

தற்போது மலேசியாவில் கோலாலம்பூர், லங்காவி உள்ளிட்ட இடங்களில் புகைப்படங்களை எடுத்து தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகின்றார். அவர் எப்போது முதல் மலேசியாவில் இருக்கிறார்? எதற்காக வந்திருக்கிறார் என்ற விவரங்கள் உறுதியாகத் தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட அவரது இன்ஸ்டாகிராமில் 167,000 பேரும், பேஸ்புக்கில் 7,000 பேரும் அவரைத் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.