Home Featured உலகம் தாய்லாந்து மன்னரின் உடல் நிலை மோசமடைகின்றது!

தாய்லாந்து மன்னரின் உடல் நிலை மோசமடைகின்றது!

744
0
SHARE
Ad

thailand-king-bumipol

பேங்காக் – செயற்கை சுவாசத்தோடு, உயிருக்குப் போராடி வரும், தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யாயாடேஜ்  உடல் நலம் மேலும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு கல்லீரல், இரத்தத்தில் தொற்று கிருமிகள் போன்ற உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து அரண்மனை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தாய்லாந்து முழுமையிலும் அவருக்காக வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

1946 முதல் தாய்லாந்து மன்னராக இருந்து வரும், 88 வயதான பூமிபோல் உலகில் மிக நீண்ட காலத்திற்கு மன்னராக இருக்கும் பெருமையைப் பெற்றவராவார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வரும் நிலையில், மன்னரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனை சென்று சந்தித்து வருகின்றனர். அவரது மகனும், அடுத்த தாய்லாந்து மன்னராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுபவருமான மகாவஜிரலொங்கோர்ன் மருத்துவமனை சென்று தந்தையைச் சந்தித்து வருகின்றார்.

மருத்துவமனையைச் சுற்றிலும் வெளிர் சிவப்பு (பிங்க்க்) நிறத்திலான டி-சட்டைகளை அணிந்து கொண்டு நூற்றுக்கணக்கானோர் மன்னர் மீதான தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர். மன்னர் உடல் நலமடைய வேண்டும் என்பதைக் குறிக்கும் வண்ணம் அவர்கள் வெளிர் சிவப்பு டி-சட்டைகளை அணிந்திருந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் மஞ்சள் நிற டி-சட்டைகளை அணிந்திருந்ததனர். மஞ்சள் தாய்லாந்தின் அரச குடும்ப வண்ணமாகும்.

தாய்லாந்து மன்னரின் உடல் நலம் மோசமடைந்து வருவதால், தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வரும் அந்த நாட்டில் மேலும் அரசியல் குழப்பங்களும், சர்ச்சைகளும் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.