Home Featured தமிழ் நாடு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

591
0
SHARE
Ad

stalin_opsசென்னை – தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னை தலைமைச்செயலகத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியுள்ளார். ஸ்டாலினுடன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.