
பேஸ்புக் என்றாலே பொழுதுபோக்கு தானே என்ற மேம்போக்கான வாதத்தை உடைப்பதற்காகவே ஒர்க்ப்ளேஸ் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முழுக்க முழுக்க வர்த்தகர்களும், தன்னார்வ அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் தங்களின் அலுவலக ரீதியிலான நோக்கங்களுக்காக இதனைப் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் விளம்பரங்களே இதில் இருக்காது என்பது தான்.
பேஸ்புக் நிறுவனத்தின் படி தற்போது இந்தியா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளில் ஒர்க்ப்ளேஸ் பயன்பாட்டில் உள்ளது. மிக விரைவில் உலக நாடுகளில் ஒர்க்ப்ளேஸ் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.