அதன் காரணமாக, ‘ராயாட் துவாங்கு’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு ஒன்று, இன்று இஸ்தானா நெகாராவிற்கு வெளியே கூடி, சுல்தான்களுக்கு மரியாதையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றது.
தற்போது அக்குழு அரண்மனைக்கு வெளியே கூடி, சுல்தான்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
நடப்பு பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் (கெடா சுல்தான்) 5 ஆண்டு கால பதவிக்காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியோடு நிறைவடைவதால், சுல்தான்கள் இன்று கூடி, புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments