வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து ஐந்து பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் , 68ம், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடுகின்றனர். தொடக்கத்தில் அதிரடியான பிரச்சாரங்கள் மூலம் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டும் பெண்கள் குறித்து அவர் இழிவாகப் பேசும் காணொளி வெளியானதால் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் அவரது செல்வாக்கு சரியத்துவங்கியது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஐந்து பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.