Home Featured உலகம் தாய்லாந்து மன்னர் மறைவு: ஓராண்டுக்கு துக்கம் அனுசரிப்பு!

தாய்லாந்து மன்னர் மறைவு: ஓராண்டுக்கு துக்கம் அனுசரிப்பு!

709
0
SHARE
Ad

thalland-mourning-king-bhumipol-deathபேங்காக் – நேற்று வியாழக்கிழமை மதியம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யாடேஜ் காலமானதை அடுத்து, அடுத்து 30 நாட்களுக்கு நாடெங்கிலும் உள்ள அரசாங்க அலுவலகங்களில் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு தாய்லாந்து பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சுமார் 70 ஆண்டுகள் மன்னராகப் பதவி வகித்த அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1 வருடம் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அதனைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice