Home Featured தமிழ் நாடு கிண்டி விபத்தில் 3 மாணவிகள் பலி – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கிண்டி விபத்தில் 3 மாணவிகள் பலி – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

562
0
SHARE
Ad

stalinசென்னை – சென்னையில் நேற்று முக்கிய சாலை ஒன்றில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் 2 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி வாசல் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கிண்டியில்,தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழப்பு: உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கும்,சக மாணவ மாணவிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.