Home உலகம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு

662
0
SHARE
Ad

chinaபீஜிங், மார்ச்.20- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்துள்ளது.

இது குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-

கடற்கரை பகுதிகளான, ஷென்சென், உ லுசிசியாங் தீவு உள்ளிட்ட இடங்களில் கடல்நீரின் உப்பை அகற்றி குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

இதற்காக, முக்கிய நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரின் பயன்பாடு குறித்து மக்களிடம் விளக்கும்படி  சம்பந்தப்பட்ட நகர நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தீவுகளுக்கு  நன்னீரில் பாதி அளவு திருப்பிவிடப்பட்டுள்ளது. கடற்கரையோர தொழிற்சாலைகளுக்கு 15 சதவீத கடல் நீர் விநியோகிக்கப்படும்.