Home Featured உலகம் “அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறோம்” – பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு!

“அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறோம்” – பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு!

734
0
SHARE
Ad

Rodrigo Duterte-President Philippines

பெய்ஜிங் – சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, தங்களது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் அவர், இனி பிலிப்பைன்ஸ், பெய்ஜிங்கின் உதவியையே நாடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுட்டர்ட்டே சீனத் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “அமெரிக்காவுடனான எங்களது இராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான உறவுகளில் இருந்தும் பிரிகிறோம் என்பதை இங்கு நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எங்களது நட்பை அமெரிக்கா இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், மிக விரைவில் தான்ரஷ்யாவிற்கு சென்று அந்நாட்டு அதிபர் புதினைச் சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளது, அமெரிக்க வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் அமெரிக்காவையும், அதிபர் ஒபாமாவையும், டுட்டர்ட்டே மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.