அண்மையில், மிகப் பெரிய அளவிலான பிணைத்தொகையைப் பெற்ற பின் தாங்கள் பிடித்து வைத்திருந்த நார்வே நாட்டவரை விடுவித்த அபு சயாப் அடுத்ததாக ஜெர்மன் நாட்டவரைப் பிணை பிடித்துள்ளது.
இது குறித்து அபு சயாப் அமைப்பைச் சேர்ந்த முவாம்மர் அஸ்காலி அலியாஸ் அபு ராமி என்பவன் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு பிலிப்பைன்சைச் சேர்ந்த தாவி தாவி தீவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளைத் தாங்கள் பிணை பிடித்ததாகத் தெரிவித்துள்ளான்.
மேலும், அவர்கள் இருவரில் ஒருவர் பெண் என்றும், அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாகவும் அவன் குறிப்பிட்டுள்ளான்.
தங்களை நோக்கி அப்பெண் துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், அதனால் தாங்கள் அவரை சுட்டுக் கொன்றதாகவும் அஸ்காலி தெரிவித்துள்ளான்.
கடத்தப்பட்டுள்ள ஜெர்மன் நாட்டவர் பெயர் ஜூஜென் காந்தெர் (வயது 70) என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.