Home Featured இந்தியா மோடியின் அதிரடி அறிவிப்புகள்: பயங்கரவாதிகள் ஹவாலா பணத்தைப் பயன்படுத்துகின்றனர்!

மோடியின் அதிரடி அறிவிப்புகள்: பயங்கரவாதிகள் ஹவாலா பணத்தைப் பயன்படுத்துகின்றனர்!

842
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

புதுடில்லி – இந்தியப் பிரதமர் இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்த முக்கிய உரையின் மேலும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:

  • ஹவாலா பணமாற்றங்கள் மூலம் கறுப்புப் பணம் பதுக்கப்படுகின்றது. இந்தப் பணம் பயங்கரவாதிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
  • போலியாகத் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளும் கறுப்புப் பண புழக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
  • மக்களின் சட்டபூர்வமான பணம் பாதுகாக்கப்படும்.
  • நவம்பர் 10-ஆம் முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
  • நவம்பர் 9, 10ஆம் தேதிகளில் சில மின்னியல் பணப்பட்டுவாடா இயந்திரங்கள் இயங்காது.
  • நவம்பர் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பணம் மாற்றுவதற்கான கட்டுப்பாடு 4,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.
  • மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், இரயில் நிலையங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு 500,1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளும்.
  • விமான நிலையங்கள் 5,000 ரூபாய் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ஏற்றுக் கொள்ளலாம்.
  • இருப்பினும், கடன் பற்று அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்),   பற்று அட்டைகள் (debit cards), ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் தடை ஏதும் இருக்காது. மின்னியல் மூலமான பண பரிமாற்றங்கள் வழக்கம்போல் வங்கிகளின்  மூலம் நடைபெறும்.
  • டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்ளப்படலாம். மாற்றும்போது அடையாள அட்டைகளைக் காட்ட வேண்டும்.
  • டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பின்னர் மார்ச் மாதம் வரை குறிப்பிட்ட சில வங்கிகள், மையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். அவ்வாறு மாற்றும்போது, அந்தப் பணம் குறித்த சத்தியப் பிரமாண அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.