புதுடில்லி – இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு வானொலி, தொலைக்காட்சிகளின் வழி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்-விவரங்கள் பின்வருமாறு:-
- கறுப்புப் பணத்திற்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் போர் தொடர்கின்றது.
- 500 ரூபாய், 1,000 ரூபாய் பண நோட்டுகள் இனி செல்லாது. நாளை முதல் இந்த பண நோட்டுகள் சட்டபூர்வ பணமாக ஏற்றுக் கொள்ளப்படாது.
- எதிர்வரும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த நோட்டுகள் வங்கியில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும்போது பணத்தைத் திரும்ப செலுத்துபவரின் அடையாள அட்டைகள் காட்டப்பட வேண்டும்.
- பிரதமரின் புதிய அறிவிப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.
- நவம்பர் 9, 10-ஆம் தேதிகளில் வங்கிகளில் உள்ள மின்னியல் பணப்பட்டுவாடா இயந்திரங்கள் இயங்காது. முடக்கப்படும்.
- இன்றிரவு 9.00 மணிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நாட்டு மக்களுக்கு நேரடியாக தொலைக்காட்சி வழி கூடுதல் விவரங்களை வழங்குவார்.
- மருத்துவமனைகள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியும்.
- நவம்பர் 11-ஆம் தேதி வரை விமான நிலையங்கள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளும். பெட்ரோல் நிலையங்களும் இந்த நோட்டுகளை ஏற்றுக் கொள்ளும்.
- நவம்பர் 9-ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்.
- மின்னியல் இயந்திரங்களில் இருந்து பணம் வெளியே எடுப்பது 2,000 ரூபாயாக கட்டுப்படுத்தப்படும். பின்னர் இது 4,000 ரூபாயாக கட்டுப்படுத்தப்படும்.
(மேலும் விவரங்கள் தொடரும்)