Home Featured உலகம் சீன விமானப்படையின் முதல் பெண் விமானி மரணம்!

சீன விமானப்படையின் முதல் பெண் விமானி மரணம்!

823
0
SHARE
Ad

ஹாங் காங் – சீனா விமானப்படையின், ஜெ – 10 போர் விமானப் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் விமானியான யு சூ (வயது 30) நேற்று சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் பலியானார்.

china1ஹெபெய் பகுதியில் நேற்று நடைபெற்ற சீனாவின் விமானப் படை தினத்தின் போது யுவும் மற்றொரு ஆண் விமானியும் சென்ற போர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறின் போது, ஆண் விமானி விமானத்திலிருந்து வெளியேறினார்.

ஆனால் யு-வால் அவ்விமானத்தில் இருந்து வெளியேற முடியாத காரணத்தால், அவர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியானார்.

#TamilSchoolmychoice