Home Featured உலகம் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

613
0
SHARE
Ad
New Zealand-map
வெல்லிங்டன் – நியூசிலாந்தின் தென் தீவை உலுக்கியுள்ள 7.8 புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பொது தற்காப்புத் துறை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையை நோக்கி சுனாமி அலைகள் எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நாட்டின் உட்புறங்களுக்கு அல்லது உயர்ந்த இடங்களுக்கு சென்று விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

2011-ஆம் ஆண்டில் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த கிரிஸ்ட்சர்ச் நகரிலிருந்து வடகிழக்கு நோக்கி 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.