Home Featured நாடு வேட்டியில் கலக்கிய கைரி ஜமாலுடின்!

வேட்டியில் கலக்கிய கைரி ஜமாலுடின்!

788
0
SHARE
Ad

khairy-veshti-feature

கோலாலம்பூர் – வழக்கமாக இந்திய உடைகளான சுடிதார், புடவைகள் உடுத்திக் கொண்டு மலாய், சீனப் பெண்கள் காட்சியளிப்பது உண்டு. ஆனால், ஒரு மலாய்க்காரர், அதுவும் ஓர் அமைச்சர் வேட்டியில் வந்ததை நீங்கள்  கண்டதுண்டா?

அந்த அரிய காட்சியை நமக்கு வழங்கியவர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், அம்னோ இளைஞர் பகுதித் தலைவருமான கைரி ஜமாலுடின்தான்.

#TamilSchoolmychoice

khairy-jamaludin-saravan-open-house-veshti

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட கைரி, வேட்டியில் வந்து அசத்தினார்.

அந்த திறந்த இல்ல பொது உபசரிப்பில் கலந்து கொண்டவர்களில் பலர் ஆர்வத்துடன் கைரி வேட்டியுடன் இருக்கும் அரிய சந்தர்ப்பத்தில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.