கோலாலம்பூர் – கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நவம்பர் 14-ம் தேதி இரவு, வானில் மிகப் பெரிய நிலவு தோன்றவுள்ளது.
வழக்கமாக 14 மாதங்களுக்கு ஒருமுறை ‘சூப்பர் மூன்’ என்றழைக்கப்படும் இந்த பெரிய நிலவு காட்சித் தரும்.
ஆனால் இன்று திங்கட்கிழமை இரவு வரப் போகும் நிலவு வழக்கத்தை விட 15 விழுக்காடு மிகப் பெரியதாகவும், 30 விழுக்காடு அதிக பிரகாசத்துடனும் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த 1948 -ம் ஆண்டு தோன்றிய இந்த முழு நிலவு, இதற்குப் பிறகு வரும் 2034-ம் ஆண்டு, நவம்பர் 25-ம் தேதி தான் தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இன்று இரவு தோன்றும் இந்நிலவை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதால், மக்களிடையே ஆர்வம் மிகுந்து காணப்படுகின்றது.
அதேவேளையில், இந்நிலவைப் படமெடுக்க உலகம் முழுவதும் புகைப்படக் கலைஞர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.