Home Featured நாடு அடுத்த பொதுத்தேர்தலில் ரபிசியால் போட்டியிட முடியாது – கோபிந்த் கருத்து!

அடுத்த பொதுத்தேர்தலில் ரபிசியால் போட்டியிட முடியாது – கோபிந்த் கருத்து!

720
0
SHARE
Ad

rafiziகோலாலம்பூர் – அலுவலக இரகசிய சட்டத்தை மீறியதாக பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது என்று வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

“2000 ரிங்கிட் அபராதம் அல்லது 1 வருடத்திற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். அதனால் அவரால் வேட்பாளராக முடியாது” என்று கோபிந்த் கூறியுள்ளார்.

எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் மேல்முறையீட்டிற்குப் பிறகு இறுதித் தீர்ப்பு வரும் வரையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கலாம் என்றும் கோபிந்த் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice