கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் இறந்துவிட்டதாக இணையதளம் ஒன்றில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை.
டெலிகிராப்-டிவி.கோ.யுகே (Telegraph tv.co.uk) என்ற பெயரிலான போலி இணைதளம் ஒன்றில் முன்னாள் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தனது 91-வயதில் இறந்துவிட்டார் என்ற பொய்யான தகவல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரவியது.
இதனைப் போலியென பெரும்பாலான மலேசியர்கள் அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர். எனினும் தற்போது அத்தகவல் நட்பு ஊடகங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு புக்கிட் ஜெலுத்தோங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மகாதீர் கலந்து கொண்டு பேசியுள்ளதாக மலேசிய ஊடகம் ஒன்று நம்பத்தகுந்த தகவலை வெளியிட்டுள்ளது.