கோலாலம்பூர் – அடுத்த ஆண்டிலிருந்து அரசாங்க மருத்துவமனைகளில் முதல் மற்றும் இரண்டாம் வார்டுகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண அதிகரிப்பானது இரண்டு மேல் வகுப்புகளுக்கு மட்டும் தான் என்றும், மூன்றாம் வகுப்பு வார்டுக்குக் கட்டணம் அதிகரிப்பு கிடையாது என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.
எனினும், எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கட்டணம் அதிகரிக்கப்படலாம் என மலாய் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“கடந்த 30 ஆண்டுகளாக கட்டண உயர்வு இல்லை. தற்போது கட்டண அதிகரிப்பு இருந்தாலும் கூட, இன்னமும் அரசாங்கம் அதிக மானியம் வழங்கி வருகின்றது” என்று நேற்று திங்கட்கிழமை டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.