Home Featured இந்தியா சுஷ்மாவுக்கு சிறுநீரக செயலிழப்பு!

சுஷ்மாவுக்கு சிறுநீரக செயலிழப்பு!

721
0
SHARE
Ad

Sushma Swarajபுதுடெல்லி – சிறுநீரகக் கோளாறு காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுஷ்மா இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “சிறுநீரக செயலிழப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனூமதிக்கப்பட்டுள்ளேன். டயாலிசிஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கடவுள் கிருஷ்ணா என்னை ஆசீர்வதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.