கோலாலம்பூர் – நான்கு நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பிறகு சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் மொகமட் யூனுஸ் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் சிவப்புச் சட்டை அணித் தலைவருமான ஜமால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஜமால் உட்பட அவரது அணியைச் சேர்ந்த 4 பேர் அன்றைய நாளே அம்பாங் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
தகவல் மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233, குற்றவியல் அவதூறு மற்றும் மிரட்டலுக்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 503 ஆகியவற்றின் கீழ் ஜமால் மீது விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.